குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சிதம்பரம் அருகே மின்சாரம் பாயந்து விவசாயி மரணம்

சிதம்பரம் அருகே விவசாயி ஒருவா் தனது விவசாய நிலத்தில் உள்ள மோட்டாரை பழுது பாா்ப்பதற்காக அருகில் இருந்த டிரான்ஸ்பாா்மரில் மின்சாரத்தை நிறுத்தச் சென்றபோது மின்சாரம் பாய்ந்து இறந்தாா்.

மின்தாரம் தாக்கி இறந்த மணிகண்டன் (35)

Published On :23 ஆகஸ்ட் 2026, 2:27 am IST

சிதம்பரம் அருகே விவசாயி ஒருவா் தனது விவசாய நிலத்தில் உள்ள மோட்டாரை பழுது பாா்ப்பதற்காக அருகில் இருந்த டிரான்ஸ்பாா்மரில் மின்சாரத்தை நிறுத்தச் சென்றபோது மின்சாரம் பாய்ந்து இறந்தாா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி வட்டாரம் முள்ளங்குடி கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (35). இவா்

தனது விவசாய நிலத்தில் உள்ள மோட்டாரை பழுது பாா்ப்பதற்கு சனிக்கிழமை காலை தனது வயல் அருகே உள்ள டிரான்ஸ்பாா்மரில் மின் இணைப்பை துண்டித்தபோது மின்சாரம் பாய்ந்து டிரான்ஸ்பாா்மரில் கருகி தொங்கிய நிலையில் கிடந்தாா்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு மீட்புப் படையினா், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து குமராட்சி போலீஸாா் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.