முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

முதல்வர் விஜய்யுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு!

தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் விசிக தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்ததைப் பற்றி...

News image

முதல்வர் விஜய்யுடன் விசிக தலைவர் திருமாவளவன். - (கோப்புப் படம்)

Updated On :18 ஆகஸ்ட் 2026, 12:23 pm IST

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் விசிக தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலைப் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு திங்கள்கிழமை (ஆக.17) நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டத்துக்கு மத்தியில் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் பேசுகையில், “இன்று ஆளும் முதல்வர் சி. ஜோசப் விஜய் உடன் கூட்டணி வைத்துள்ளோம். இனி தமிழக அரசியல் களத்தில் தவெகவுடன் விசிக இணைந்தே பயணிக்கும். இத்தனை காலம் ஆளும் கட்சியுடன் நாம் கூட்டணி வைத்தோம். இனி விசிகவும் ஆளும் கட்சியாக மாறும்” என்று தெரிவித்திருந்தார்.

தவெகவுடன் விசிக கூட்டணி என வெளிப்படையாக அறிவித்த நிலையில், தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய்யை விசிக தலைவர் தொல். திருமாவளவன் இன்று (ஆக. 18) சந்தித்தார். அவருடன் சமூகநீதித்துறை அமைச்சரும், விசிகவின் துணைப் பொதுச் செயலருமான வன்னி அரசு, மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தார்.

விசிக மாநாட்டில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், வரும் தேர்தல்கள் கூட்டணி வியூகங்கள் குறித்து முதல்வர் விஜயுடன் பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த விசிக, தேர்தலுக்குப் பின்னர் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆட்சியமைக்க போதிய ஆதரவு இல்லாததால், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. தேர்தலுக்குப் பின்னர் எந்தக் கூட்டணியிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லை என்று திருமாவளவன் கூறிவந்த நிலையில், திடீரென இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

Summary

VCK leader Thol. Thirumavalavan met and held discussions with Chief Minister Vijay at the Secretariat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.