பாடகராகும் அபிஷன் ஜீவிந்! பிக்காசோ பட முதல் பாடலை வெளியிடும் சூரி!
சிவ ராஜ்குமார் - அபிஷன் ஜீவிந் இணைந்து நடித்துள்ள “பிக்காசோ” படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து...

அபிஷன் ஜீவிந் - சூரி - கோப்புப் படம்
சிவ ராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந் இணைந்து நடித்துள்ள “பிக்காசோ” திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் சூரி வெளியிடுவார் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சசிகுமாரின் “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந், “வித் லவ்” படத்தின் மூலம் நாயகனாகவும் அறிமுகமாகினார்.
இந்த நிலையில், அபிஷன் ஜீவிந் நாயகனாக நடிக்கும் “பிக்காசோ” எனும் புதிய படத்தில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை, அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில், நடிகர்கள் யோகலட்சுமி, கானா வினோத் மற்றும் ஷிவாணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் இசையில் உருவாகும் இந்தப் படத்தின் “ஹக்குனாமாடாட்டா” எனும் முதல் பாடலை, நடிகர் அபிஷன் ஜீவிந் பாடியுள்ளதாக, படக்குழு சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், அபிஷன் ஜீவிந் பாடியுள்ள “பிக்காசோ” திரைப்படத்தின் முதல் பாடலை, முன்னணி நடிகர் சூரி நாளை (நவ. 27) மாலை 5.30 மணிக்கு வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இயக்குநராகவும், நடிகராகவும் பாராட்டுகளைப் பெற்ற அபிஷன் ஜீவிந் பாடகராக அறிமுகமாகவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Summary
actor Soori will release the first song from the movie “Picasso,” which stars Shiva Rajkumar and Abishan Jeevinth.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

