மோகன்லாலின் 368ஆவது படத்தின் முதல் பார்வை போஸ்டர்..! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
நடிகர் மோகன்லால் நடிக்கும் அவரது 368ஆவது படத்தின் படப்பிடிப்பு குறித்து...

மோகன்லாலின் 368ஆவது படத்தின் முதல் பார்வை போஸ்டர் - படம்: எக்ஸ் / மோகன்லால்
மலையாள நடிகர் மோகன்லால் நடிக்கும் அவரது 368ஆவது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று (அக்.30) தொடங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல மலையாள இயக்குநர் சத்தியன் அந்திகாட் அவர்களின் மகன் அனூப் சத்யன் உடன் இணைந்து தனது 368ஆவது படத்தில் மோகன்லால் நடிக்கிறார். இதற்கான பூஜை தொடங்கியுள்ளது.
அனூப் சத்யன் இயக்கத்தில் முன்னதாக வரண அவஷ்யமுண்ட், ஐசியு ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. ஆசீர்வாத் சினிமாஸ் சார்பாக இந்தப் படத்தை பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் தயாரிக்கிறார்.
இந்தப் படத்துக்கு தற்காலிகமாக ’எல்368’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. லாலேட்டன் என்பதன் சுருக்கமாக எல் என்ற எழுத்து பயன்படுத்தப்படுகிறது.
படக்குழுவுடன் இருக்கும் புகைப்படங்களை மோகன்லால் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இத்துடன் படத்தின் முதல் பார்வை போஸ்டரும் வெளியாகியுள்ளது. கடலோரத்தில் மோகன்லால் இரண்டு குழந்தைகளுடன் விளையாடும்படியான காட்சி ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
கடைசியாக மோகன்லால் அவரது மகளின் துடக்கம் படத்திலும் ரஜினியின் ஜெயிலர் 2 படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். விரைவில் தருண் மூர்த்தி இயக்கியுள்ள அதிமனோகரம் திரைக்கும் வரவிருக்கிறது.
#L368 Pooja Ceremony pic.twitter.com/vRCzTgE6ob
— Mohanlal (@Mohanlal) October 30, 2026
#L368 pic.twitter.com/bhEyMA2mj8
— Mohanlal (@Mohanlal) October 30, 2026
Summary
Actor Mohanlal starts shooting for Anoop Sathyan's 'L368'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


