அதிமனோகரம் படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கிய மோகன்லால்!
தருண் மூர்த்தி இயக்கியுள்ள அதிமனோகரம் படத்தின் டப்பிங் பணிகள் குறித்து...

மோகன்லால், தருண் மூர்த்தி - படங்கள்: இன்ஸ்டா / தருண் மூர்த்தி
நடிகர் மோகன்லால் தான் கதாநாயகனாக நடித்துள்ள ‘அதிமனோகரம்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.
துடரும் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் அவரது 366ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் டி.எஸ். லவ்லஜன் எனும் காவல்துறை அதிகாரியாக மோகன்லால் நடித்துள்ளார். ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. 115 நாள்களில் படப்பிடிப்பை முடித்தது. கடந்த செப்டம்பரில் படப்பிடிப்பு முடிவடைந்ததாகப் படக்குழு விடியோ வெளியிட்டது.
காவல்துறை அதிகாரியாக உடையணிந்து இருக்கும் காட்சிகளே இந்த விடியோவில் இருக்கிறது. த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படமும் துடரும் போல வெற்றியைப் பெருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். iந்தப் படத்துக்கு கதை ரதீஷ் ரவி எழுதியுள்ளார். இந்தப் படம் காவல்துறையின் விசாரணை - குடும்ப உறவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு டிச.24ஆம் தேதி வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Mohanlal begins dubbing for Tharun Moorthy’s Athimanoharam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


