
ஹிந்தி மொழியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் தமிழில் மறுஉருவாக்கம் செய்யப்படவுள்ளது.
ஹிந்தியில் நடிகை பிரியா ஷர்மா, ராம் கபூர் முதன்மை பாத்திரங்களில் நடித்து ஒளிபரப்பான படே அச்சே லக்டே ஹாய்ன் (Bade Achhe Lagte Hain) என்ற தொடர் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்படவுள்ளது.
இந்தத் தொடர் உள்ளம் கொள்ளை போகுதே என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. டப்பிங் ஒளிபரப்பிலும் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தது. இந்நிலையில் இந்தத் தொடர் முழுமையாக தமிழில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது.
இந்தத் தொடரில் நடிகை ரேஷ்மா முரளிதரன் நாயகியாக நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகர் ஜெய் ஆகாஷ் நடிக்கவுள்ளார்.
திரைப்பட நாயகனான ஜெய் ஆகாஷ், சமீபகாலமாக சின்னத்திரையில் நடித்து வருகிறார். 2020-ல் நீதானே என் பொன் வசந்தம் தொடரில் நாயகனாக நடித்திருந்தார். தற்போது இந்த புதிய தொடரில் நாயகனாக நடிக்கவுள்ளார்.
இவருக்கு ஜோடியாக நடிக்கும் ரேஷ்மா, சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் கிழக்கு வாசல் தொடரில் நடித்திருந்தார். இந்தத் தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. இதனால் புதிய தொடரில் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு முன்பு பூவே பூச்சூடவா, அபி டெய்லர் உள்ளிட்ட தொடர்களில் நாயகியாக நடித்துள்ளார்.
நடிகர் ஜெய் ஆகாஷ் நடிகை ரேஷ்மா முரளிதரனுடன் இணைந்து நடிப்பதாக முன்பே தகவல் வெளியான நிலையில் தற்போது அது ஹிந்தி தொடரின் மறுஉருவாக்கம் எனத் தெரியவந்துள்ளதாலும், அந்த ஹிந்தி தொடருக்கும் பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளதாலும் இந்தத் தொடரி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.