விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் டிஆர்பியில் கலக்கி வருகிறது. இத்தொடர் மொத்தம் 5 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் மிகவும் பிரபலமாகி வருகின்றனர். சிறகடிக்க ஆசை தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களும் விரும்பி பார்க்கும் தொடராக உள்ளது.
பிரதான வேடத்தில் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா ஆகியோர் இத்தொடரில் நடிக்கிறார்கள். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரை இயக்கிய எஸ்.குமரன் இத்தொடரை இயக்குகிறார்.
நடிகை கோமதி பிரியா சிறகடிக்க ஆசை தொடரின் மலையாள மொழிபெயர்ப்பிலும் நாயகியாக நடிக்கிறார். இத்தொடரில் நடிக்கும் நடிகர்கள் சினிமாவிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
இத்தொடரில் மனோஜ் பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஸ்ரீதேவா சினிமாவில் நடிக்கவுள்ளதாக முன்னதாக தெரிவித்து இருந்த நிலையில், இந்த தொடரில் மீனாவின் தங்கை சீதா பாத்திரத்தில் நடிக்கும் நடிகை சங்கீதா லியோனிஸ் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
நடிகை சங்கீதா லியோனிஸ் இயக்குநர் ரஞ்சித்தின் குற்றம் புதிது படத்தில் நடிக்கவுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் பூஜை விழா முன்னதாக நடைபெற்றது.
குற்றம் புதிது படத்தில் சின்னத்திரை பிரபலங்கள் நிஹாரிகா மற்றும் ஸ்ரீநிதியும் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.