கார்த்தி - அரவிந்த் சாமி படத்தின் முக்கிய அறிவிப்பு!

கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடித்துள்ள படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று(மே 24) மாலை வெளியாகவுள்ளது.
கார்த்தி - அரவிந்த் சாமி படத்தின் முக்கிய அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘96’.

6 ஆண்டுகளுக்குப் பின் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். இது, கார்த்தியின் 27-வது படமாகும்.

2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் நடைபெற்று முடிந்தது.

கார்த்தி - அரவிந்த் சாமி படத்தின் முக்கிய அறிவிப்பு!
எக்ஸ் ‘டிரெண்டிங்கில்’ நடிகர் விஜய்..!
எக்ஸ் ‘டிரெண்டிங்கில்’

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கடந்த பிப்ரவரியில் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில், கார்த்தி 27 படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று(மே 24) மாலை 5 மணிக்கும், மற்றோரு அறிவிப்பு இரவு 7 மணிக்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com