எக்ஸ் ‘டிரெண்டிங்கில்’ நடிகர் விஜய்..!

தவெக தலைவரும் நடிகருமான விஜயின் பிறந்தநாள் குறித்து டிரெண்ட் செய்துவரும் ரசிகர்கள்.
எக்ஸ் ‘டிரெண்டிங்கில்’ நடிகர் விஜய்..!
Published on
Updated on
1 min read

தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் பிறந்தநாளிற்கு இன்னும் ஒருமாத காலம்மட்டுமே உள்ள நிலையில், அதனை எக்ஸ் தளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர் விஜர் ரசிகர்கள்.

வரும் ஜூன் 22ஆம் தேதி, தனது 50ஆவது பிறந்தநாள் காணும் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்து, #VIJAYBdayFestin1Month எனும் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.

எக்ஸ் ‘டிரெண்டிங்கில்’ நடிகர் விஜய்..!
நடிகர் ஷாருக்கான் டிஸ்சார்ஜ்!

தென்னிந்திய திரைப்படங்கள், குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களை உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்க்க விரும்புகிறார்கள். எனவே கோலிவுட்டில் அறிமுகமாகும் ஒரு நடிகர், வளரும் நடிகர் மற்றும் முன்னணி நடிகர் என படிப்படியாக உயர்ந்து திரையுலக உச்சியில் இருப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதை சாதித்துக் காட்டியவர் தான் இளைய தளபதியாக இருந்து தற்போது தளபதியாக கோடிக்கணக்கான மக்கள் மனதில் வாழும் நடிகர் விஜய்.

தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்து நிற்கும் தளபதி விஜய்யின் இடத்தினை யாராலும் நிரப்பிட முடியாது. பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், திருமலை, கில்லி, போக்கிரி, நண்பன், துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், பிகில், மாஸ்டர் போன்ற பல படங்கள் விஜய்யின் திரைப்பயணத்தில் இன்று வரை சிறந்த படங்களாக இருக்கின்றன.

எக்ஸ் ‘டிரெண்டிங்கில்’ நடிகர் விஜய்..!
ஆஸ்கர் நூலகத்தில் பார்க்கிங் திரைக்கதை!

மேலும் 2023 -2024 கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, தவெக தலைவர் விஜய் அவர்கள், விருது வழங்கிச் சிறப்பிக்கும் கல்வி விருது விழாவின் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், 2ஆவது ஆண்டாக நடைபெறவிருக்கும் இவ்விழாவினை, ’தனது பிறந்த நாளுக்குள்ளாக (ஜூன் 22) நடத்த வேண்டும்’ என கட்சி உறுப்பினர்களுக்கு தகவல் அளித்துள்ளார், தவெக தலைவர் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com