/

நடிகர் ஷாருக்கான் டிஸ்சார்ஜ்!

நடிகர் ஷாருக்கான் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :23 மே 2024, 7:44 pm IST

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ஷாருக்கானின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், உடல்நிலை குணமடைய போதுமான ஓய்வெடுக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியும் உள்ளனர்.

ஷாருக்கானின் உதவியாளர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஷாருக்கானின் ரசிகர்கள் மற்றும் நலவிரும்பிகள் அனைவருக்கும் நன்றி; அவர் நன்றாக இருக்கிறார்; உங்கள் அன்பு, பிரார்த்தனை மற்றும் அக்கறைக்கும் நன்றி.” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் குவாலிபையர் ஐபிஎல் போட்டியைக் காண்பதற்காக நடிகரும், கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கான், நரேந்திர மோடி மைதானத்திற்கு தனது குடும்பத்துடன் வந்தார்.

இப்போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நேரடியாக இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது. இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களுக்கு ஐடிசி நர்மதா ஹோட்டலில் சிறப்பான வரவேற்பு கொடுத்தார் ஷாருக்கான்.

இந்நிலையில், நேற்று மதியம் திடீரென உடல் உச்ச வெப்பநிலையால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல் வெளிவந்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.