'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! இன்று 6 மாவட்டங்களில் மழை! நாளை (அக். 4) 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு! இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர் விஜய் கண்டனம்

உங்களால் நாடு பெருமை அடைகிறது! இந்திய விமானிக்கு ஷாருக்கான் பாராட்டு!

174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பாராட்டு...

Captain Smit Machchhar

இந்திய விமானி ஸ்மித் மச்சார் - நடிகர் ஷாருக்கான் - கோப்புப் படம்

Published On :

இஸ்ரேல் சென்ற விமானத்தில் சக விமானியால் தாக்கப்பட்ட நிலையிலும், பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பாராட்டியுள்ளார்.

துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்குக் கடந்த செப்.30 அன்று 174 பயணிகளுடன் சென்ற ஃபிளைதுபை விமானம் நடுவானில் பறந்தபோது அதை இயக்கிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை சக விமானி கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்றார்.

பின்னர், ஸ்மித் மச்சாரின் முயற்சியால் வேறு இரண்டு விமானிகள் அந்த விமானத்தைத் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து சௌதி அரேபியாவில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடு உங்களை நினைத்து பெருமைகொள்கிறது எனக் குறிப்பிட்டு இந்திய விமானி ஸ்மித் மச்சாரை பாராட்டி நடிகர் ஷாருக்கான் இன்று (அக்.3) பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“கேப்டன் ஸ்மித் மச்சார், மிகவும் முக்கியமான அந்தத் தருணத்தில் நீங்கள் உறுதியுடன் செயல்பட்டீர்கள். துணிச்சலுடன் சவால்களை எதிகொண்டு உயிரைப் பணயம் வைப்பது எளிதல்ல.

ஆனால், விமானத்தில் இருந்தவர்களைப் பாதுகாக்க நீங்கள் அதைச் செய்துள்ளீர்கள். நீங்கள் விரைவில் குணமடைய வேண்டுமென வாழ்த்துகிறேன். நாடு உங்களை நினைத்து பெருமை கொள்கிறது” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, கேப்டன் ஸ்மித் மச்சாரை “ஹிரோ” எனக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Shah Rukh Khan has praised Indian pilot Smith Machar, who saved the lives of passengers despite being attacked by a co-pilot on a flight to Israel.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.