கல்கி இயக்குநர் நாக் அஸ்வின், எலான் மஸ்க்.
கல்கி இயக்குநர் நாக் அஸ்வின், எலான் மஸ்க்.

எலான் மஸ்க்கிடம் வேண்டுகோள் விடுத்த கல்கி இயக்குநர்!

கல்கி 2898 ஏடி படத்தின் இயக்குநர் எலான் மஸ்க்கிடம் விடுத்த வேண்டுகோள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on

சா்வதேச அளவில் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைவராக இருப்பவர் எலான் மஸ்க். ட்விட்டரை வாங்கியவுடன் அதனை எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா வரவிருந்த நிலையில் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம்  'கல்கி 2898 ஏடி'. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். 

ரூ.600 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டக்குபதி, கமல்ஹாசன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

கல்கி இயக்குநர் நாக் அஸ்வின், எலான் மஸ்க்.
நாயகனாக அறிமுகமாகும் ஆமிர் கான் மகன்!

முன்னதாக 'கல்கி 2898 ஏடி' படத்தில் நடிகர் பிரபாஸின் பெயர் பைரவா எனக் குறிப்பிட்டு படக்குழு போஸ்டரை வெளியிட்டதுடன் இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரோபோ கதாபாத்திரமான புஜ்ஜியின் டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. புஜ்ஜிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். ரோபோவுடன் நடிகர் பிரபாஸ் நடத்தும் உரையாடல்கள் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.

கல்கி இயக்குநர் நாக் அஸ்வின், எலான் மஸ்க்.
சம்பளம், ஆண்-பெண் வேறுபாடு குறித்து ஆதங்கம் தெரிவித்த ராஷி கண்ணா!

இந்நிலையில் கல்கி இயக்குநர், “டியர் எலான் மஸ்க் சார், எங்களது புஜ்ஜி எனும் வாகனத்தை நீங்கள் பார்க்க வேண்டும் மற்றும் இயக்க வேண்டும் என நாங்கள் உங்களை அழைக்கிறோம். இது 6 டன் பீஸ்ட். முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. முழுவதும் எலக்ட்ரிக், எஞ்ஜினியரிங்கின் உதவியால் உருவாக்கப்பட்டது. இது உங்களது சைபர் ட்ரக் உடன் சிறந்த புகைப்படமாக இருக்கும் என்பதை நிச்சயமாக சொல்லுவேன். நாம் இருவரும் இணைந்து இதனை இயக்க வேண்டுமென நினைக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com