

பிரபல யூடியூபர் விஜே சித்து மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
யூடியூப்பில் ‘ஃபன் பன்றோம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் விஜே சித்து. தற்போது தன்னுடைய பெயரிலேயே (விஜே சித்து வி லாக்ஸ்) யூடியூப் சேனலைத் தொடங்கி குறுகிய காலத்திலேயே 2.58 மில்லியன் (25.8லட்சம்) ஃபாலோயர்களைப் பெற்றுள்ளார்.
இதுமட்டுமின்றி சினிமா பிரபலங்கள் தங்களது படத்தின் புரமோஷனுக்காக இவரது மொட்டை மாடி பார்டி எனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு பிரபலம் அடைந்துவிட்டார்கள்.
இதன்படி ஆர்ஜே பாலாஜி, கவின், லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன், விஜய் ஆண்டனி என பலரும் கலந்துகொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் செல்போனில் பேசியபடி காரை இயக்கியதாக புகார் எழுந்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதற்காக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பிரபல யூடியூபரும் பைக் ஓட்டுநருமான டிடிஎஃப் வாசன் மீது இப்படியான புகார் எழுந்தது. சமூக வலைதளங்களில் வாசன் கைதைத் தொடர்ந்து, முடிந்தால் இவர் (விஜே சித்து) மீது நடவடிக்கை எடுங்கள் என மீம்ஸ்கள் பறந்தன.
டிடிஎஃப் வாசன் மீது ஏற்கனவே ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட நிலையில் வாசன் விதிகளை மீறியதால் கைது செய்யப்பட்டார். பின்னர் வாசனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.