நடிகர் பாலகிருஷ்ணா சர்ச்சை குறித்து அஞ்சலி விளக்கம்!

தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா சர்ச்சை குறித்து பதிலளித்துள்ளார் நடிகை அஞ்சலி.
நடிகர் பாலகிருஷ்ணா சர்ச்சை குறித்து அஞ்சலி விளக்கம்!
Published on
Updated on
1 min read

நந்தமூரி பாலகிருஷ்ணா என்னும் பாலகிருஷ்ணா தெலுங்கில் புகழ்பெற்ற நடிகராக இருக்கிறார். இவர் ஆந்திரத்தில் முதலமைச்சராக இருந்த மறைந்த என். டி. ராமராவின் ஆறாவது மகனாவார்.

தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா படமென்றாலே தனி ரசிகர்கள் உண்டு. இறுதியாக இவர் நடிப்பில் வெளியான, வீர சிம்ஹா ரெட்டி, பகவந்த் கேசரி திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் வெற்றிப் படங்களாகின. ரசிகர்கள் இவரை செல்லமாக பாலய்யா என்றே அழைக்கின்றனர்.

அதேநேரம், பாலய்யா அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். மொதுமேடைகளில் திடீரென ரசிகர்களை அதட்டுவது, புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் கோவப்படுவது என எதாவது நடக்கும்.

நடிகர் பாலகிருஷ்ணா சர்ச்சை குறித்து அஞ்சலி விளக்கம்!
விஜய், அஜித் படங்களில் நடிக்க மறுத்தது ஏன்? சாய் பல்லவி விளக்கம்!

‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வந்த பாலகிருஷ்ணா, மேடை ஏறியதும் நடிகை அஞ்சலியைத் தள்ளி நிற்கச் சொன்னார். அஞ்சலியும் நகர்ந்தார். ஆனால், திடீரென இன்னும் முன்னால் என அஞ்சலியைத் தள்ளிவிட்டார். ஒருகணம் தடுமாறிய அஞ்சலி, இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு சிரித்தார்.

நடிகர் பாலகிருஷ்ணா சர்ச்சை குறித்து அஞ்சலி விளக்கம்!
பிரேம்ஜிக்கு திருமணம்! யார் அந்தப் பெண்?

இது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. இந்நிலையில் நடிகை அஞ்சலி இது குறித்து பதிலளித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், “கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் முன் வெளியீட்டு விழாவுக்கு சந்து சிறப்பித்த பாலகிருஷ்ணா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலகிருஷ்ணா அவர்களுக்கும் எனக்கும் எப்போதும் ஒருவர்க் கொருவர் மீது மரியாதை இருக்கிறது. நாங்கள் பல வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம். மீண்டும் அவருடன் மேடையை பகிர்ந்துகொண்டது அற்புதமான நிகழ்வு” எனக் கூறியுள்ளார்.

இந்தப் பதிவின்மூலம் சமூக வலைதளத்தில் விமர்சித்தவர்களுக்கு வாய்பூட்டு போட்டிருக்கிறார் அஞ்சலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.