தென்னிந்தியாவின் பிரபலமான நடிகை சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் படத்திற்கு தென்னிந்தியா முழுவதும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடனத்திற்கென அவருக்கு தெலுங்கில் பல படங்கள் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன.
நடிகை சாய்பல்லவி 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கு படத்தில் நாக சைதன்யாவுடன் நடிக்கிறார். சாய் பல்லவி நடிப்பில் கடைசியாக வெளியான விராட பருவம், கார்கி திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறப்பு கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சாய் பல்லவி, “பொதுவாக நான் வதந்திகளுக்கு பதில் சொல்வதில்லை. ஏனெனில், அது இன்னமும் கூடுதல் பலம்பெரும்; அதுமட்டுமின்றி வதந்திகளுக்குப் பதில் சொல்வது எனது வேலையையும் தொந்தரவு செய்யும். ஆனால் இதைச் சொல்லியே ஆக வேண்டும். நான் இதுவரை எந்த விஜய்-அஜித் படங்களையும் நிராகரிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.
நாக சைதன்யாவுடன் ஒரு தெலுங்கு படமும் தமிழில் சிவகார்த்திகேயனுடன் அமரன் படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.