இயக்குநர் வெங்கட் பிரபுவின் தம்பியும் இயக்குநர் பாடலாசிரியர் கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி அமரனுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக தன்னை முன்னிருத்தும் பிரேம்ஜி வெங்கட் பிரபு படங்களில் நடித்து பிரபலமானார்.
இந்தாண்டின் தொடக்கத்தில் பிரேம்ஜி நிச்சயமாக திருமணம் நடக்குமெனக் கூறியிருந்தார். அதன்படி தற்போது திருமண அழைப்பிதழ் வந்திருக்கிறது.
45 வயதாகும் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் வருகிற ஜூன் 9ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் இந்தத் திருமணம் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மணமகள் பெயர் இந்து. மற்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. சினிமா தொடர்பில்லாத நபராக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பிரேம்ஜிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.