
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கருப்பி என்ற நாய் உயிரிழந்தது.
பரியேறும் பெருமாள் படத்தில் தண்டவாளத்தில் கட்டப்பட்டு ரயிலில் சிக்கி அடிபட்டு உயிரிழந்த கருப்பி, நிஜத்தில் பேருந்தில் சிக்கி அடிபட்டு இறந்துள்ளது.
தீபாவளியன்று வெடித்த பட்டாசுகளால் அதிக ஒலி எழுந்ததன் காரணமாக, இதனைத் தாங்க முடியாமல் அலறியடித்து வீட்டிலிருந்து வெளியேறி சாலையில் ஓடியுள்ளது. அப்போது எதிரே வந்த பேருந்தில் சிக்கி கருப்பி உயிரிழந்தது.
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்தவரும் (கருப்பி வளர்ந்த இடம்) புளியங்குளத்தைச் சேர்ந்தவருமான வள்ளிநாயகம் கூறியதாவது, தீபாவளியன்று பட்டாசுகளால் அதிக சத்தம் எழுந்ததால் வீட்டிலிருந்த கருப்பி சாலைக்கு ஓடிச்சென்றது. அப்போது பேருந்தில் சிக்கி உயிரிழந்தது எனக் குறிப்பிட்டார்.
பரியேறும் பெருமாள் படத்தில் ரயிலில் அடிபட்டு உடல் நசுங்கி இறந்ததைப் போல, நிஜத்திலும் பேருந்து மோதி இறந்துள்ளது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பி குறித்து மாரி செல்வராஜிடம் கேள்வி
2018ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் வெளியானபோது, சென்னை மற்றும் கோவா சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
படத்தின் முதல் 10 நிமிடங்களில் இடம்பெற்ற கருப்பி நாய் பலியாகும் காட்சிகள் திரைப்பட விழாக்களில் மட்டுமல்லாது, ரசிகர்களிடமும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
இயக்குநர் மாரி செல்வராஜிடம் படம் தொடங்கி 10 நிமிடங்களில் கருப்பி நாயை படுகொலை செய்யும் படியான காட்சியை ஏன் வைத்தீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மாரிசெல்வராஜ், நான் சொல்லப்போகும் கதையினை ரசிகர்கள் உள்வாங்கிக் கொள்ள, அவர்களின் மனம் மிகவும் இளகிய தன்மையுடன் இருக்கவேண்டும் என நினைத்தேன். அதனால், ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாயை தண்டவாளத்தில் கட்டிவிடுவதைப் போன்றும், கருப்பி நாய் ரயிலில் அடிபட்டு இறப்பதைப்போன்றும் காட்சிகளை வைத்தேன் எனக் கூறினார்.
நடிகர் கதிர் இரங்கல்
பரியேறும் பெருமாள் படத்தில் நாயகனாக நடித்த நடிகர் கதிர், கருப்பி நாய் இறப்பு குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "கருப்பி நீ இல்லாத காட்டில் நான் எப்படி தான் திரிவேனோ ? உன் ஆன்மா சாந்தியடையட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவுடன் பரியேறும் பெருமாள் படப்பிடிப்பின்போது கருப்பி நாயுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க | மோசமான பழக்கத்தை கைவிட்ட நடிகர் ஷாருக் கான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.