
நடிகர் கமல் ஹாசனின் பிறந்தநாளுக்கு அவரது மகளான ஸ்ருதி ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் கமல் ஹாசனுக்கு இன்று 70-வது பிறந்தநாள். 65 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் கமலுக்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முக்கியமாக, கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படத்தின் வெளியீட்டை டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். டீசரில் இடம்பெற்ற கமல்ஹாசனின் தோற்றங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதையும் படிக்க: தக் லைஃப் - வெளியீட்டுத் தேதி டீசர்!
இந்த நிலையில், கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தன் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்துடன், “பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா. நீங்கள் அபூர்வமான வைரம். எப்போதும் உங்கள் பக்கத்தில் நடப்பதே என் வாழ்க்கை விருப்பங்களில் ஒன்று. உங்களுடைய மாயாஜால கனவுகள் நிறைவேறுவதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன் அப்பா” என தன் வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.