தக் லைஃப் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி டீசர் இன்று வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது.

தக் லைஃப் - கமல்ஹாசன்
நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கடந்த செப்டம்பரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இந்த நிலையில், இன்று நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு 44 விநாடிகள் கொண்ட படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
டீசரில் இப்படம் அடுத்தாண்டு ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளனர்.
டீசரில் கமல் மாறுபட்ட வேடத்தில் வருவது படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏன் என்னை ஏதோ செய்தாய் திரைப்படத்தின் டீசர்!

மொத ராத்திரி - வெளியீட்டுத் தேதியுடன் முதல் தோற்ற போஸ்டர்!

நடிகர் சசிகுமார் நடித்த வதந்தி - 2 வெளியீட்டுத் தேதி!

ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு - 2 வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


