’டிராகன்’ திரைப்படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின் கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த தகவலை டிராகன் திரைப்படக் குழு சற்று முன் வெளியிட்டுள்ளது.
இயக்குநராக மட்டுமல்லாது கதாநாயகனாகவும் முத்திரைப் பதித்துள்ள பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக அடுத்ததாக நடித்து வரும் ’டிராகன்’ திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார். ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் டிராகன் திரைப்படத்தில் ‘மயில்வாகனன்’ என்ற கதாபாத்திரமேற்று நடிக்கிறார் மிஷ்கின்.

தமிழ் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்துள்ள அஷ்வத் மாரிமுத்து இயக்கி வரும் டிராகன் திரைப்படத்தில் மிஷ்கின் மட்டுமல்லாது இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரும் கைகோர்த்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் ‘வாலே குமார்’ என்ற கதாபாத்திராத்திலும், கே. எஸ். ரவிக்குமார் ‘பரசுராம்’ என்ற கதாபாத்திராத்திலும் நடிக்கின்றனர்.
இதனை குறிப்பிட்டு மேற்கண்ட 3 இயக்குநர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். டிராகன் திரைப்படத்தின் மூலம் இளம் நாயகி ‘கயாது லோஹார்’ தமிழில் முதல்முறையாக கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









