இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நூறு சாமி திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இயக்குநர் சசி இயக்கத்தில் நூறு சாமி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நாளை (ஜூன் 19) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தை முன்பே பார்த்த பலரும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். முக்கியமாக, இயக்குநர் சசிக்கு நெருக்கமான இயக்குநர்கள் பலரும் படத்தைப் பார்த்துவிட்டு அதன் முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், “சசி, உங்களின் நூறு சாமி திரைப்படத்தில் இழுத்துப்பிடிக்கும் வகையில் ஆன்மாக்களும் கவிதைகளும் நிறைந்திருக்கின்றன. நடிகை ஸ்வாசிகா மீதிருந்து உங்கள் கண்களை விலக்கவே முடியாது. சிரிப்பை வரவழைக்கும் கதாபாத்திரத்தில்,விஜய் ஆண்டனியை மிகவும் கவனமாக பார்க்க வைத்தீர்கள், அது எனக்கு மௌனராகம் படத்தில் இருந்த ஒரு கதாபாத்திரத்தை நினைவூட்டியது. அருமையாக செய்திருக்கிறீர்கள் சசி, நாங்கள் அனைவரும் உங்களுக்காக ஆதரவாக நிற்கிறோம்!” எனத் தெரிவித்துள்ளார்.
Gautham Menon praises 'Nooru Saami'!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










