நூறு சாமி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.
சொல்லாமலே, ரோஜா கூட்டம், பிச்சைக்காரன், பூ, சிவப்பு மஞ்சள், பச்சை போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குநர் சசி.
இவரின் நூறு சாமி என்ற புதிய படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, கணவனை இழந்த பெண்ணை மையப்படுத்தி உணர்வுப்பூர்வமாக இந்தப் படம் எடுக்கப்பட்டது.
நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து இருந்தனர். கணவனை இழந்த பெண்ணாகவும் இரண்டு மகன்களின் அம்மாவாகவும் சிறப்பான நடிப்பை ஸ்வாசிகா வழங்கியிருந்தார்.
நூறு சாமி திரைப்படம் ரூ. 16 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நூறு சாமி திரைப்படம் வரும் ஜூலை 31 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
Summary
Information regarding the OTT release of the movie Nooru Saami has come to light.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நூறு சாமி படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

நடிகர் விஜய் ஆண்டனியின் நூறு சாமி வசூல் இவ்வளவா?

நூறு சாமி டிரைலர்!

நூறு சாமி டிரைலர் அறிவிப்பு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



