ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

என் பொருத்தமான ஜோடி த்ரிஷாதான்! ரசிகர்களின் கேள்விக்கு விஜய்யின் பதில்கள் - 2

ரசிகர்களின் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் அளித்த பதில்கள்...

News image

விஜய், த்ரிஷா

Updated On :18 ஜூன் 2026, 11:19 am IST

நவம்பர் 1, 2005 சினிமா எக்ஸ்பிரஸ் தீபாவளி மலரில் ரசிகர்களின் கேள்விகளுக்குத் தற்போதைய முதல்வர் விஜய் அளித்திருந்த பதில்கள்...

தாயின் அன்பு, தாரத்தின் அன்பு சிறந்தது எது? ஈ.சிதம்பரம், ஸ்ரீவில்லிப்புத்தூர்,

எப்போதுமே, எல்லா காலத்திலும், தாயின் அன்பு தானே சிறந்தது. தாய்க்குப்பின் தானே தாரம்.

ஹாய் விஜய்! இரட்டை வேடத்தில் எப்போது நடிப்பீர்கள்?

ஆ. ஏகா, தார்வழி.

அது எனக்கே தெரியல... அமையும்போது நடிப்பேன்.

சினிமா எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கே.விஸ்வநாத், பெங்களூர்.

இந்த தீபாவளியில் உங்கள் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று தீப ஒளி போல் பிரகாசமாய் ஒளிர வாழ்த்துக்கள்.

உங்களின் பலம் எது? பலவீனம் எது? மங்கலம் க. மோகன், திருவண்ணாமலை.

பலம் - ரசிகர்கள். பலவீனம் - எதுமில்லை.

சூப்பர் ஸ்டாரிடம் உங்களுக்குப் பிடித்தது எது? பிடிக்காதது எது?

பாலாஜி, சிதம்பரம்.

ரொம்ப ரொம்ப பிடிச்சது அவரோட எளிமை. அவருகிட்ட பிடிக்காததுன்னு எதுவும் சொல்ல முடியாது.

அப்பாவைப்போல் இயக்குநராக வேண்டும் என்ற எண்ணம் உண்டா?

சாத்தூர் எம். செல்லையா. சாத்தூர்

கண்டிப்பாக இல்லை!

'புலி' படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாகளாமே?

கே விஜய்குமார், ஈரோடு

ம்.. கூம்! சிங்கிள் ரோல் தான். போலீஸ் ஆபீஸரா வர்றேன். முதல் தடவையா போலிஸா நடிக்கிறேன்.

அன்புள்ள விஜய், நடிகர் திலகம் பற்றி?

கவிதா, கல்லிடைக்குறிச்சி.

'சந்திரமுகி' வெற்றி விழாவில் சொன்னதுதான். சிவாஜி என் அப்பா. அவரது நடிப்பைப் பார்த்து எந்தனையோ முறை பிரமித்திருக்கிறேன்.

பாடல்கள் பாடுவதை குறைத்துக் கொண்டு விட்டது ஏன்?

ச.சித்ரா சத்தியநாதன், இரவாஞ்சேரி

சின்ன வயசிலேர்ந்தே நல்ல நடிகனா வரணும்னுதான் ஆசைப்பட்டேன். பாட ஆரம்பிச்சது எதிர்பாராம கிடைச்ச வாய்ப்பு, நம்ம கவனம் நடிப்புலதான். அடுத்துதான் பாடல், கண்டிப்பாக நான் தான் பாடியாகணுங்கற சூழ்நிலை அமைந்தால் பாடுவேன்.

அஜித்துடன் 'திருப்பதி' பட பூஜையில் கலந்து கொண்ட அனுபவம் பற்றி?

ஜெயச்சந்திரன், சேவூர்.

சந்தோஷமா இருந்தது. கூப்பிட்டாங்க, போனேன். வாழ்த்தினேன்.

வித்தியாசமான கதைகளில் நடிப்பீர்களா?

யோகன், அமராவதிப்புதூர்.

எனக்கு எது பொருத்தமாக இருக்குமோ அதில்தான் ஆர்வம் காட்டுவேன்.

உங்கள் படங்களின் பாடல்கள் பிரபலமாகி விடுகிறதே?

வளன் அரசு, அம்பாசமுத்திரம்.

அப்படியா? ரொம்ப சந்தோஷம்! அதுக்குக் காரணம் டைரக்டர்களும், இசையமைப்பாளர்களும்தான். என் பங்கு எதுவுமில்லை.

சினிமாவில் உங்களின் பொருத்தமான ஜோடியாக யாரைச் சொல்வீர்கள்?

கே.பாரதிராஜா, மேட்டூர்

முன்பு சிம்ரன் இருந்தாங்க. இப்ப 'கில்லி' வெற்றியின் மூலம் த்ரிஷா அயிட்டாங்க.

எங்களுக்கு ஒரு கவிதை

கமலி வெங்கட், வெண்ணந்தூர்

ஒரு கவிதை என்னங்க இந்த மலரில் நிறைய கவிதைகள் இருக்கு பொறுமையா படிச்சு, ரசிச்சு, நீங்க எங்கிட்ட சொல்லுங்க!

இதுவரை நீங்கள் நடித்த படங்களில் உங்கள் மனதைத் தொட்ட கேரக்டர் எது? பூதப்பாடி இராமலிங்கம், எஸ்.பி. கவுண்டனூர்

'திருப்பாச்சி'யில் வரும் 'சிவகிரி' கேரக்டர்

'கில்லி முதல் 'சிவகாசி' வரை இந்த வருடம் பல வெள்ளி விழாப் படங்களைக் கொடுத்துள்ளீர்கள். ஆகையால் இந்த தீபாவளி இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறதா? தேவி, திண்டுக்கல்.

பின்னே..! டபுள் சந்தோஷமுங்க! அதுக்கு ரசிகர்களாகிய உங்களுக்குத்தான் நன்றி சொல்லனும்.

பிறமொழிப் படங்களில் நடிக்காதது ஏன்? ரஜினிமுருகன், பாண்டிச்சேரி

விருப்பமில்லை... நடிக்கல! வேற எந்த மொழியும் எனக்கு அவ்வளவா தெரியாதுங்க.

உங்களிடம் உள்ள ஸ்பெஷல் திறமை என்ன? டி.கே. சங்கர். தஞ்சாவூர்.

அதை நீங்க தான் சொல்லனும்!

அரசியலில் இறங்கிவிட்ட கேப்டன் பற்றி உங்களின் கருத்து? பாப்பாமி பொன்னமராவதி.

விஜயகாந்த் சார் எந்த துறையில் இறங்கினாலும் சிறந்து விளங்குவார் என்பதில் சந்தேகமேயில்லை.

டான்ஸ் ஆடுவதில் நீங்கள்தான் டாப். இந்த ஆட்டத்தை யாரிடம் கற்றுக் கொண்டீர்கள்? ராமகிருஷ்ணன், புதுக்கோட்டை

யாரிடமும் கத்துக்கல. சின்ன வயசிலேயே எனக்கு டான்ஸில் ஆர்வம் அதிகம். நான் நல்லா டான்ஸ் பண்ணுறேன்னு சொன்னதுக்கு ஒரு தேங்கஸ்.

விஜய் அவர்களே. ஆதி படத்தில் உங்களுடைய கேரக்டர் என்ன?

பி. சிங்காரவேல், திருப்புகலூர்.

காலேஜ் ஸ்டூடண்டா வாறேன். 'திரு மலை' படத்தை டைரக்ட் பண்ணின 'ரமணா' டைரக்ட் பண்றார்.

சிவகாசி எப்படி வந்திருக்குது? எஸ்.ரெங்கள். ஸ்ரீரங்கம்.

ஒரு ரசிகனா ரசிச்சுப் பார்த்தேன். எதிர்பார்த்ததை விட நல்லா வந்திருக்கு. பெண்கள், குழந்தைகள் யாரையும் மிஸ் பண்ணக கூடாதுன்னு நானும், டைரக்டர் பேரரசுவும் ரசிச்சு வொர்க் பண்ணியிருக்கோம்.

'இளமை' படத்தில் உங்கள் தந்தை நடிப்பது பற்றி?

கல்லுக்குழி எம். இரளீந்திரன், திருச்சி.

இந்த வயசிலேயும் அவர் லைஃப்பே ரொம்ப என்ஜாய் பண்றாரு. ஆச்சர்யமா இருக்கு-

இளைய தளபதி அவர்களே! சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் தம்பி, மகன், நண்பன் இந்த மூன்று வேடங்களில் நீங்கள் எதை ஆவலுடன் தேர்ந்தெடுப்பீர்கள்?

சி.மந்திரமூர்த்தி, நாகர்கோவில்

நீங்கள் விரும்பிய கேரக்டரை!

குட்டி விஜய்யை நடிக்க வைப்பது எப்போது? ஜி. வெங்கடேஷ். சேலம்

அது அவருடைய விருப்பம்.

'சிவகாசி' அடுத்து வெளிவரும் படம் எது? எம். விஜி, கோட்டயம்.

'ஆதி', அப்புறம் 'புலி',

சென்னை வந்தால், உங்களை எப்போது சந்திக்கலாம் விஜய்? ஆர்.ராதா, காங்கேயம்

இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் சந்திக்கலாம்.

(2005 ஆம் ஆண்டு சினிமா எக்ஸ்பிரஸ் தீபாவளி மலரில் ரசிகர்களின் கேள்விகளுக்குத் தற்போதைய முதல்வர் விஜய் அளித்திருந்த பதில்களின் தொகுப்பு).

Answers given by the current Chief Minister Vijay to fans' questions in the 2005 Cinema Express Diwali special issue...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.