வேளாங்கண்ணி விரைவு ரயில் மீண்டும் சென்னை எழும்பூரிலிருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணி காரணமாக வேளாங்கண்ணி விரைவு ரயில், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், வருகின்ற ஜூலை 1 முதல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி விரைவு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணியிலிருந்து ஜூன் 30 ஆம் தேதி புறப்படும் ரயில் எண். 16176, மறுநாள் (ஜூலை 1) காலை 5.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 1 முதல் சென்னை எழும்பூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு புறப்படும் ரயில் எண். 16175, இரவு 9 மணிக்கு புற்ப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Summary
Velankanni Express resumes operations from Egmore!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










