புதிய உச்சத்தில் முட்டை விலை!விசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மனைவியிடம் எதையும் மறைக்கக் கூடாது! ரசிகர்களின் கேள்விகளுக்கு விஜய் பதில்கள் - 1

ரசிகர்களின் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் அளித்த பதில்கள்...

News image

சிவகாசி விஜய்

Updated On :17 ஜூன் 2026, 5:40 pm IST

நவம்பர் 1, 2005 சினிமா எக்ஸ்பிரஸ் தீபாவளி மலரில் ரசிகர்களின் கேள்விகளுக்குத் தற்போதைய முதல்வர் விஜய் அளித்திருந்த பதில்கள்...

சினிமா எக்ஸ்பிரஸ் தீபாவளி மலரில் வாசகர்களின் கேள்விகளுக்கு விஜய் பதில்கள் அளிக்கிறார் என்று அறிவித்திருந்தோம். அடுத்த நாளிலிருந்தே ஆயிரக் கணக்கான கேள்விகள் குவிய ஆரம்பித்தது. எதை விடுக்க, எதை தொடுக்க என்று திணறிப் போனோம். கடைசியில் அத்தனையும் அள்ளிக்கொண்டு, 'சிவகாசி' படத்தின் டப்பிங்கில் பிஸியாக இருந்த விஜய்யிடம் கொட்டினோம்.

ஒரு சில கேள்விகளை வாசித்தவர்... 'டப்பிங் முடிந்ததும் ஆபீஸுக்கு போயிடலாம். நிதானமா படிச்சு... ரசிச்சு... பதில் சொல்றதுதானே முறை...' என்றார். சொன்னதைச் செய்தார்.

உங்களின் பட் பட் கேள்விகளுக்கு... விஜய்யின் 'பட்'டாசு பதில்கள் இதோ...

வாண்டுகளை இப்படி மயக்கி வைத்திருக்கிறீர்களே எப்படி? கோபாலபுரம். க. சித்ரா, புதுவை.

என்ன சொல்றதுன்னே தெரியல... அவங்க அன்பு என்னை வியக்க வைக்குது. கடவுளுக்குதான் நன்றி சொல்லணும்னு நெனைக்கிறேன். அவங்கள்லாம் எனக்கு கிடைச்சிருக்கறாங்காங்கறது ஒரு பெரிய சொத்து மாதிரிதான். சுட்டீஸ்களுக்காகவும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து நடிக்கிறேன்.

அடுத்த ஜென்மத்திலும் நான் உங்களின் ரசிகனாக இருக்க விரும்புகிறேன். அது நிறைவேறுமா? கே.விஜய்கார்த்திக், சித்தார்.

இந்த ஜென்மத்திலேயே நீங்க என் ரசிகனா இருக்கிறது என்னோட லக். அடுத்த ஜென்மம்ங்கறது அது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. இருக்கிற வரை நாமும் சந்தோஷமா இருக்கணும். மத்தவங்களையும் சந்தோஷப்படுத்தணும்.

நீங்களும் அஜித்தும் நல்ல நண்பர்கள் என்பதை சமீபத்தில் நிரூபித்துள்ளீர்கள். அதேபோல் இருவரும் இணைந்து நடிப்பீர்களா? மோகன் பிரியன், வெள்ளக்கோவில்.

அதற்கான கதை அமைந்தால் கண்டிப்பாக இணைவோம்.

சினிமாத் துறையை நீங்கள் விரும்பியது, உங்களின் கனவா? ஆசையா? டி. ரஞ்சித்குமார் வெள்ளக்கோவில்,

ஆசை! சின்ன வயசிலேர்ந்தே சினிமாவில நடிக்கணும்ங்கற ஆசையை வளர்த்துகிட்டேன். அதை அப்பாகிட்ட சொன்னேன். அப்புறம்தான் உங்களுக்கே தெரியுமே!

உங்கள் தந்தையுடன் இணைந்து நடிப்பீர்களா? அந்தோணி பாபு, விக்கிரமசிங்கபுரம்.

நிச்சயமாக! ஆனால் அதற்கான நல்ல கதை அமைய வேண்டும்.

உங்களின் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டி விட்டீர்களா? தங்களது மனைவி பெயரின் முதல் எழுத்து - தங்கள் பெயரின் முதல் எழுத்து இரண்டையும் இணைத்து, 'சவிதா' என்று வைக்கலாமே? சத்தியநாராயணன், அயன்புரம்.

நன்றி. ஆனால் அவங்களுக்கு 'திவ்யா ஷாஷா'ன்னு இப்பத்தான் பெயர் வச்சோம். கொஞ்சம் சீக்கிரமா சொல்லியிருக்கக் கூடாதா பிரதர்?

அன்புள்ள அண்ணன் விஜய்க்கு, உங்களின் தொடர் வெற்றிக்கு காரணம் என்ன? பவானி, பாளையங்கோட்டை.

டைரக்டர்கள் அப்புறம் முக்கியமா என் ரசிகர்களாகிய நீங்கள்!

என் மனைவி பாரதி உங்களின் ரசிகை. நான் அஜித்தின் ரசிகன். சினிமா பற்றி நாங்கள் பேசும்போது, சில சமயங்களில் எங்களுக்குள் ஊடல்கள் வருவதுண்டு. எங்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

பி.காமராஜ் - பாரதி. மகாராஷ்டிரா.

ஹி..ஹி..! பேசாம ரெண்டு பேரும் யாருக்காவது ஒருத்தருக்கு ரசிகர்களாக இருங்க. எதுக்கு உங்களுக்குள்ள வீண் சண்டை. ம்....?

நல்ல நண்பர்களை எப்படி தேர்ந்தெடுப்பது? நெல்லை த ஞானசெல்வன், பிரியம்மாள்புரம்.

இது ஒன்றும் பெரிய விஷயமே அல்ல நண்பா! முதலில் நீங்கள் நல்ல நண்பராக இருங்கள். எல்லோருமே உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.

தொடர் வெற்றிகளுக்கு மத்தியில் ஒரு தோல்விப் படம் வரும்பொழுது உங்களின் மனநிலை எப்படி இருக்கும்? சி.கார்த்திகேயன், சாத்தூர்.

கண்டிப்பா கஷ்டமாகத்தான் இருக்கும். அதில் என்ன தப்பு பண்ணியிருக்கோம்னு பார்த்து, அடுத்த படத்துல வராம பார்த்துக்குவேன். எல்லா படத்துக்கும் ஒரே மாதிரிதான் உழைக்கிறோம். ஃபெயிலியர்னு வரும்போது எல்லோருக்குமே கஷ்டமாகத்தான் இருக்கும்.

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிப்பீர்களா? எஸ்.முருகன், கோட்டயம்.

கண்டிப்பாக!

ஹாய் விஜய், நீங்க நல்லா பாடுறீங்களே, இதை நீங்க எப்ப கத்துக்கிட்டீங்க?

எம்.சுதாமேரி, கல்லிடைக்குறிச்சி.

எங்கப்பா சொல்லுவாங்க, நான் எங்கம்மா வயித்தில இருக்கும் போதே இசையைக் கத்துக்கிட்டவன்னு. நான் கருவுல இருந்த அந்த ஒன்பது மாசமும் தினமும் ஏதாவது ஒரு மேடைக் கச்சேரியில எங்கம்மா பாடிக்கிட்டு இருப்பாங்களாம். நான் அவங்க பாட்டை கேட்டுக்கிட்டே தான் வளர்ந்திருக்கேன். நான் பிறந்த பிறகும் எங்கம்மா மேடையில் பாடிகிட்டு இருந்தாங்க. எங்கப்பா என்னைக் கையிலே வச்சுக்கிட்டு முதல் வரிசையில் உட்கார்ந்துகிட்டு இருப்பாங்களாம். இப்படி கருவில் தொடங்கி நாலு வயசு வரைக்கும் இசையை பாலோடு, சேர்த்துக் கொடுத்து என்னை வளர்த்திருக்காங்க.

ஏதோ சில பாடல்களை சினிமாவிலே பாடிக்கிட்டிருக்கேனா, அதுக்கு இதுதான் காரணம்.

Story image

எங்கம்மாவுக்கு ஏதாவதுல சாதிக்கணும்னு நினைப்பு இருந்திருக்கு. அவங்க மாதிரி நாமும் சாதிக்க நினைச்சா போதும், எந்த வயசிலயும் சாதிக்கலாம். அந்த நம்பிக்கையை அம்மாகிட்டே இருந்துதான் நான் கத்துக்கிட்டேன். என் அம்மாவை நினைச்சா பெருமையா இருக்கு. அதுவும் போன வாரம் ரெயின் ட்ரீ ஹோட்டலில் அம்மா பாடிய 'ஷோபாவின் சமர்ப்பணம்' என்ற கர்நாடக சங்கீத ஆல்பத்தை வாலி சார் வெளியிட, நான் பெற்றுக்கொண்டேன். எந்த மகனுக்கு இந்த மாதிரியான பெருமை கிடைக்கும்? இப்ப புரியுதா நான் பாடுறதுக்கான காரணம்?.

தங்கள் மனைவியிடம்கூட சொல்லாமல், இது நாள் வரை பாதுகாக்கும் ரகசியம் ஏதேனும் உண்டா?

பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி-

எல்லா விஷயங்களையும் அவங்ககிட்ட பகிர்ந்துக்குவேன். இதுவரைக்கும் எதையும் மறைச்சதில்ல... எதுக்கு மறைக்கணும்? அவசியமில்லையே பாலாஜி!

ரசிகர்களின் கடிதங்களுக்கு பதில் எழுதுவிங்களா தலைவரே? எஸ். உஷா, திருவண்ணாமலை.

கண்டிப்பாக!

A collection of questions and answers given by Chief Minister Vijay for the Cinema Express

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.