
நடிகர் ஆசிஃப் அலி நடித்த கிஷ்கிந்தா காண்டம் திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமா இந்தாண்டிலும் நல்ல திரைப்படங்களையே கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு சில படங்களைத் தவிர்த்து பெரும்பாலும் கதையம்சமுள்ள படங்களே திரைக்கு வந்துள்ளன. அந்த வகையில், ஓணம் வெளியீடாக திரைக்கு வந்த ஆசிஃப் அலியின் கிஷ்கிந்தா காண்டம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வெற்றிப்படமானது.
ரூ. 7 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தின்ஜித் அய்யதன் இயக்கத்தில் ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் முற்றிலும் எதிர்பார்க்காத மன மாற்றங்களுடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் இப்படம் உலகளவில் ரூ. 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.
இதையும் படிக்க: விவசாய பண்ணையில் வேலை செய்யும் மோகன்லால் மகன்!
இந்த நிலையில், இப்படம் மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற நவ. 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஆசிஃப் அலி தலவன் (thalavan), அடியோஸ் அமிகோ (adios amigo), லெவல் கிராஸ் (level cross), கிஷ்கிந்தா காண்டம் என தொடர் வெற்றிகளைப் பெற்று மலையாளத்தின் முன்னணி நடிகராக முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.