
நடிகர் பிரணவ் மோகன்லால் விவசாயப் பண்ணையில் வேலை செய்து வருகிறாராம்.
நடிகர் மோகன்லாலில் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் ஹிருதயம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் கவனம் பெற்றார்.
தொடர்ந்து, வர்ஷங்களுக்கு ஷேஷம் திரைப்படத்தில் நாயகனாக நடித்து அதிலும் வெற்றிபெற்றார். அதேநேரம், குறைவான படங்களிலேயே நடிக்கும் பிரணவ், உலகம் முழுவதும் சுற்றும் பயணியாகவும் இருக்கிறார்.
எப்போதும் வெளிநாட்டு பயணங்களிலேயே இருப்பதும் அங்கு இசைக்கருவிகளை வாசித்து எளிமையான வாழ்க்கையை வாழ்வதையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார்.
இதையும் படிக்க: சூர்யாவைவிட 3 மடங்கு அதிக சம்பளம் பெற்ற ஜோதிகா!
தற்போது, அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியாமல் இருந்த நிலையில், மோகன்லால் மனைவி சுசித்ரா அளித்த நேர்காணலில் தன் மகன் பிரணவ் வாழ்க்கை அனுபவத்திற்காக ஸ்பெயினில் விவசாயப் பண்ணை ஒன்றில் கூலி பெறாமல் உணவு மற்றும் இருப்பிடத்திற்காக மட்டும் வேலை பார்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரணவிடம் ஆண்டுக்கு 2 படங்களாவது நடி என்றால் இரண்டு ஆண்டுக்கு ஒரு படம் மட்டுமே நடிக்கிறான் என தன் ஆதங்கத்தைப் பகிர்ந்ததுடன் என் கணவரும் மகனும் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசைப்படவில்லை என்றும் இருவரையும் ரசிகர்கள் ஒப்பிடுவது தனக்கு பிடிக்காது என்பதையும் கூறியுள்ளார்.
மோகன்லாலில் மகள் விஸ்மயாவும் கவிஞராக அறியப்படுகிறார். 2021-ல் அவர் எழுதிய கவிதைகள் கிரைன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட் (grains of stardust) என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.