
விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை ஹெச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.
நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பாக கேரள மாநிலம் பைய்யனூரில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடும் பாடல் காட்சிகளை எடுத்தனர்.
அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடல் குத்து பாடலாக உருவாகியுள்ளதாக தகவல். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் தான் நடிக்க உள்ளதாகக் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் சிவ ராஜ்குமார் பேசியதாவது:
தளபதி 69 படத்தின் ஒரு அழகான கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு என்னைக் கேட்டார்கள். எனது படப்பிடிப்பு தேதிகளை வைத்துதான் அதில் நடிப்பேனா என்பது தெரியும். இது விஜய்யின் கடைசிபடம் என்று சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இது கடைசி படமாக இருக்காது.
ஒரு நண்பராக நலம் விரும்பியாக சொல்கிறேன் விஜய் அற்புதமான நடிகர். நல்ல மனிதர். சினிமாவிலும் அரசியலிலும் நல்ல ஆர்வம் உடையவர். அதற்காக அவரை மதிக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.