புகழ் இல்லாதது என் குற்றமா? பிக் பாஸ் எலிமினேஷனுக்குப் பிறகு ரியா எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேரிய ரியா தியாகராஜன் முதன்முதலாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரியா தியாகராஜன்
ரியா தியாகராஜன்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேரிய ரியா தியாகராஜன் முதன்முதலாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் எந்தவித பின்புலமும் இல்லாமல் பிக் பாஸ் போட்டிக்கு வந்து, தான் வெளியேற்றப்பட்டது குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 6வது வாரத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்றதற்காக ரியா தியாகராஜன் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரவீந்திரன், அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோரைத் தொடர்ந்து 6வது நபராக ரியா தியாகராஜன் வெளியேறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை ரியா தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது,

''பிக் பாஸ் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்போது பலரும் என்னிடம் கூறியது தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள ஒரு அணியை உருவாக்கு எனக் கூறினர். எல்லோரும் தங்களைக் குறித்து மக்களிடம் சென்று சேர்க்க மக்கள் தொடர்புப் பிரிவை ஏற்படுத்து விளையாடுகின்றனர். ஆனால், நான் அப்படி செய்யவில்லை.

பிக் பாஸ் வீட்டின் உள்ளே நான் செய்யும் செயல்கள் மூலம் எனக்கு மக்கள் ஆதரவு கிடைத்தால் போதும் என்பதே என் எண்ணம். நான் ஏதோ செய்கிறேன் என்று மக்கள் நினைத்தால் போதும் என்று இருந்தேன்.

எங்களைப் போன்றவர்கள் வரக்கூடாதா?

எந்தெந்த இடங்களில் எல்லாம் தவறு நடக்கிறது என்று தோன்றியதோ? அங்கெல்லாம் நான் என் குரலை எழுப்பியுள்ளேன். இந்த விஷயங்கள் எந்த அளவுக்கு உங்களிடம் சென்று சேர்ந்தது என்று தெரியவில்லை. ஆனால் நான் ஏதோ ஒன்று செய்தேன் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஆனால், ஏன் இப்படி நடந்தது என்ற கேள்வி எனக்குள் எழுந்துள்ளது. ஏன் எனக்கு நீங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

எனக்கு புகழ் இல்லை என்பதுதான் ஒரு காரணமாக இருக்குமோ? என்ற கேள்வியும் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

என்னைப்போன்றவர்கள் பிக் பாஸ் வீட்டின் உள்ளே வரக்கூடாதா? நாங்கள் விளையாட நினைக்கக் கூடாதா? மீறி அப்படி ஏதாவது நடந்தால் நீங்கள் ஆதரவு தரமாட்டீங்களா? இவ்வாறு பல கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டுள்ளது.

இருந்தாலும் எனக்கு இத்தனை நாள் ஆதரவு தந்தவர்களுக்கு நன்றி. இதைத்தாண்டி என்ன சொல்வது என்று தெரியவில்லை'' என ரியா உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

ரியாவுக்கு பலரும் சமூகவலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | சூடுபிடிக்கும் பிக் பாஸ்: செளந்தர்யாவைக் கண்டு அச்சப்படும் முத்துக்குமரன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.