நடிகை செளந்தர்யாவைக் கண்டு முத்துக்குமரன் அஞ்சுவதைப் போன்று பேசுகிறார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் முத்துக்குமரன் மிகுந்த பலமான போட்டியாளராக மக்களால் கருதப்படுகிறார்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் செளந்தர்யாவைக் கண்டு அச்சம் ஏற்படுவதாக முத்துக்குமரன் தெரிவித்துள்ளது இணையத்தில் ரசிகர்களிடையே விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் 8 நிகழ்ச்சியிலிருந்து 6வது வாரத்தில் ரியா தியாகராஜன் வெளியேற்றப்பட்டார். போட்டி ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்படைந்து வருகிறது.
போட்டியாளர்கள் ஆண்கள், பெண்கள் என இரு அணிகளாக விளையாடிவந்தாலும், பலரும் தங்கள் தனிப்பட்ட விளையாட்டையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
செளந்தர்யாவின் புத்திசாலித்தனம்
இந்நிலையில், செளந்தர்யாவின் போட்டித் திறன் கண்டு அச்சம் ஏற்படுவதாக முத்துக்குமரன் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு வாரமும் செளந்தர்யா தனது விளையாட்டை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், இதனை அவர் திட்டமிட்டே செய்வதாகவும் கூறுகிறார்.
முதல் வாரத்தில் எப்படி இருக்க வேண்டும். இரண்டாவது வாரத்தில், மூன்றாவது வாரத்தில், நான்காவது வாரத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது செளந்தர்யாவுக்கு நன்கு தெரிந்துள்ளது. ஏன்? 10வது வாரத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது கூட செளந்தர்யாவுக்கு இப்போதே தெரியும் எனக் குறிப்பிடுகிறார்.
ஆனால், மற்ற போட்டியாளார்கள், போட்டியின் நிலையைப் பொறுத்து தங்களை வெளிப்படுத்துவதாகவும் முத்துக்குமரன் கூறுகிறார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் மனபலம் மிகுந்த போட்டியாளராக முத்துக்குமரன் கருதப்படுகிறார். வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர்களும், தொடக்கத்தில் முத்துக்குமரனை வீழ்த்துவது கடிமனாக இருக்கும் எனக் கருத்து கூறியிருந்தனர். இந்நிலையில், முத்துக்குமரனே செளந்தர்யாவைக் கண்டு அச்சப்படுவதைப் போன்று பேசும் விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | புகழ் இல்லாதது என் குற்றமா? பிக் பாஸ் எலிமினேஷனுக்குப் பிறகு ரியா எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்!