
நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் ஆரம்பமானது. அதன்பின், ஊட்டி, கேரளத்தில் நடைபெற்றது.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இப்படத்தில், சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் ஐஏஎன்எஸ்-க்கு அளித்த பேட்டியில் சூர்யா படத்தில் நடனமாடியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்ரேயா சரண் கூறியதாவது:
தமிழில் சூர்யாவின் படத்தில் நடனமாடியுள்ளேன். அடுத்து வரலாற்று படமான தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். அந்தப் படம் ஹிந்திக்கும் செல்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.