எங்கள் முடிவுக்கு மதிப்பளியுங்கள்.. ரஹ்மானின் இசைக் குழு கலைஞரின் விவாகரத்துப் பதிவு

எங்கள் முடிவுக்கு மதிப்பளியுங்கள்.. ரஹ்மானின் இசைக் குழு கலைஞரின் விவாகரத்துப் பதிவு

ரஹ்மான் விவாகரத்து தகவல் வெளியான ஒரு சில மணி நேரத்தில் வெளியான மற்றொரு விவாகரத்து அறிவிப்பு வந்தது.
Published on

புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசைக் குழுவில் இடம்பெற்றுள்ள இசைக் கலைஞர் மோஹிணி தேய் தனது விவாகரத்து அறிவிப்பில், எங்கள் முடிவுக்கு மதிப்பளியுங்கள் என்று கூறியிருக்கிறார்.

திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு நேற்று இரவு அறிவித்த தகவலையே மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் மற்றொரு விவாகரத்து அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏ.ஆர். ரஹ்மான் இசைக் குழுவில், இசைக் கருவியை இசைக்கும் பல்வேறு திறமை கொண்ட இசைக் கலைஞர் மொஹிணி தேய், தனது கணவரும் இசையமைப்பாளருமான மார்க் ஹர்ட்ச்சிடமிருந்து பிரிந்து வாழப்போவதாக, இன்ஸ்டாகிராமில் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

ஏ.ஆர். ரஹ்மான் மனைவி விவாகரத்து அறிவிப்பு வெளியான நிலையில், அந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள், மற்றொரு இசைக் கலைஞரின் விவாகரத்து அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தம்பதி நீண்ட ஒரு பதிவின் மூலம், தங்களது பிரிவுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், இருவரும் ஒருமித்த முடிவெடுத்து விவகாரத்துப் பெறப்போவதாக அறிவித்துள்ளனர்.

மிகக் கனத்த இதயத்துடன் நானும் எனது கணவர் மார்க்கும் விவாகரத்து அறிவிப்பை வெளியிடுகிறோம். எங்கள் இருவரின் முழு சம்மதத்துடன்தான் பிரிவது என்ற இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனினும் நாங்கள் தொடர்ந்து நல்ல நண்பர்களாகவே இருப்போம், இருவருக்குமே தனித்தனி தேடல்கள் இருந்தது. அதனை அடைய இருவரும் பிரிந்து ஆக வேண்டும் என்பதை புரிந்துகொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று தம்பதி பதிவிட்டுள்ளனர்.

நாங்கள் இருவரு பிரிவது என்று முடிவெடுத்தாலும், இது எங்கள் இசைப் பயணத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இணைந்து பல வேலைகளை தொடர்ந்து செய்வோம், தங்களது ரசிகர்கள், இந்த முடிவை மரியாதையுடன் ஏற்றுக்கொண்டு, எங்களது தனியுரிமையைப் பாதுகாக்க வேண்டும், தன்னிச்சையாக எதையும் மதிப்பிட்டுக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மோஹிணி தேய்க்கு தற்போது 29 வயதாகிறது. இவர் இசையுலகில் மிகவும் பிரபலமானவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு செய்திகளும் இருவேறு தகவல்களாக இருந்தாலும், ஒரே துறையிலிருந்து அடுத்தடுத்து விவாகரத்துச் செய்திகள் வரும் போது மக்கள் சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com