அற்புதமான மனிதர்! ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள்: சாய்ரா பானு

ஏ. ஆர். ரஹ்மான் குறித்து சாய்ரா பானு கருத்து...
ஏ. ஆர். ரஹ்மான், சாய்ரா பானு
ஏ. ஆர். ரஹ்மான், சாய்ரா பானு
Published on
Updated on
1 min read

ஏ. ஆர். ரஹ்மான் குறித்து சாய்ரா பானு பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.

திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதி விவாகரத்து பெறவிருப்பதாக தனித்தனியாக அறிவித்ததும், இவர்களது தரப்பிலிருந்து வழக்குரைஞரின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் வெளியானது.

சினிமாத் துறையில் இருந்தாலும் பலரிடம் மேன்மையானவர் என்கிற பெயரைப் பெற்ற ரஹ்மானுக்கு விவாகரத்து என செய்தி வெளியானதிலிருந்து ரசிகர்கள் அதிர்ச்சியுடன் இருக்கின்றனர்.

மேலும், தன் விவாகரத்து குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்புவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஏ. ஆர். ரஹ்மான் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில், ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், “அனைவருக்கும் வணக்கம். சில மாதங்களாக என் உடல்நிலை சரியில்லாததால் மும்பையில் வசித்தபடி சிகிச்சை எடுத்து வருகிறேன். என் உடல் நலம் காரணமாகத்தான் மும்பை வந்தேன். ஏ. ஆர். ரஹ்மானிடமிருந்து விலகி இருக்க இதுதான் காரணம். அனைத்து யூடியூபர்கள் மற்றும் பத்திரிகைத் துறையினரிடம் கோரிக்கை வைக்கிறேன். தயவுசெய்து ஏ. ஆர். ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள்.

அவர் உலகின் சிறந்த ஆண். அற்புதமான மனிதர். அவரை நான் முழுவதும் நம்புகிறேன். ரஹ்மான் பட வேலைகளால் சென்னையில் பிஸியாக இருக்கிறார். இந்தச் சூழலில் அவரையும் என் குழந்தைகளையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இதுவரை, அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவும் இல்லை. சிகிச்சை முடிந்ததும் விரைவில் சென்னை வருகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 40,000 திரைகளில் மகாராஜா!

’இதுவரை, அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவும் இல்லை' என குறிப்பிட்டிருப்பது விவாகரத்து தொடர்பாக எடுத்த முடிவை மாற்றுவதற்கான யோசனையில் சாய்ரா பானு இருப்பதாகவும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com