டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

லக்கி பாஸ்கர் ஓடிடி தேதி!

லக்கி பாஸ்கர் படத்தின் ஓடிடி தேதி...

Published On :

துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி செளதரி, ராம்கி, சாய் குமார், ரித்விக் ஆகியோர் நடித்த லக்கி பாக்ஸர் திரைப்படம் தீபாவளி பண்டிகைகையொட்டி அக்டோபர் 31 ஆம் தேதி வெளியானது.

வங்கியில் பணிபுரியும் அதிகாரியான பாஸ்கர் (துல்கர் சல்மான்) பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் அரசை, வங்கி நிர்வாகத்தை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார் என்கிற கதையாக உருவான இப்படம் இந்தியளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, தமிழ் மற்றும் தெலுங்கில் படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டன.

Story image

இதுவே துல்கர் சல்மானின் முதல் ரூ. 100 கோடி வசூல் திரைப்படமாகும். சரியான பான் இந்திய நடிகர் என அடையாளப்படுத்தப்பட்ட துல்கர் சல்மான், தெலுங்கில் மகாநதி, சீதா ராமம் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக லக்கி பாஸ்கரிலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற நவ. 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.