ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

தெரிந்த விஷயம்தானே... காதலை உறுதிப்படுத்திய ராஷ்மிகா!

ராஷ்மிகா மந்தனா தன் காதல் குறித்து பேசியுள்ளார்...
Published on

நடிகை ராஷ்மிகா மந்தனா தன் காதலை உறுதிப்படுத்தியுள்ளார்.

கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, டியர் காம்ரெட் படத்திலும் இருவரும் ஜோடியாக நடித்தனர்.

இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து, அல்லு அர்ஜூன், கார்த்தி, விஜய், ரன்பீர் கப்பூர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் பான் இந்தியா படங்களில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இதற்கிடையே, விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, இருவரும் இதுவரை கருத்து சொல்லவில்லை.

இந்த நிலையில், புஷ்பா - 2 புரமோஷனுக்காக சென்னை நிகழ்வில் கலந்துகொண்ட ராஷ்மிகாவிடம் அவரது காதல் குறித்தும் உங்களைத் திருமணம் செய்பவர் சினிமாத் துறையில் இருக்க வேண்டுமா இல்லை வேறு துறையைச் சேர்ந்தவரா? எனக் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு ராஷ்மிகா, “என் காதல் எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தானே... இந்தப் பதிலுக்காகத்தான் கேட்டீர்கள் எனத் தெரியும்” என்றார். இதைக்கேட்ட அல்லு அர்ஜுன், ஸ்ரீலீலா ஆகியோர் பலமாக கைதட்டி சிரித்தனர்.

புஷ்பா - 2 சென்னை  புரமோஷன் நிகழ்வில்...
புஷ்பா - 2 சென்னை புரமோஷன் நிகழ்வில்...

விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் சில ஆண்டுகளாகக் காதலித்து வருவதும் இருவரும் திருமணம் செய்யும் முடிவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com