தனுஷ் - நயன்தாரா மோதல் ஆர்வமாக இருந்தது: பார்த்திபன்

தனுஷ் - நயன்தாரா விவகாரம் குறித்து பார்த்திபன் பேசியுள்ளார்....
தனுஷ் - நயன்தாரா மோதல் ஆர்வமாக இருந்தது: பார்த்திபன்
Published on
Updated on
1 min read

நடிகர் பார்த்திபன் தனுஷ் - நயன்தாரா பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கரோனா காலத்தின்போது சினிமா படப்படிப்பு கட்டணத்தை அரசு உயர்த்தியது. இயக்குநர் பாக்கியராஜ் முதலமைச்சரை சந்தித்து கட்டணத்தை குறைக்குமாறு ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, நாள் ஒன்றுக்கு சினிமா படப்பிடிப்பிற்கு 22 ஆயிரத்திலிருந்து 17,000 ரூபாயாகவும், சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 18 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக குறைத்து முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், புதுச்சேரிக்கு வருகை புரிந்திருந்த இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து சினிமா படப்பிடிப்பு கட்டணங்கள் குறைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், சினிமா படப்பிடிப்பு கட்டணங்களைக் குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பார்த்திபன், தனுஷ், நயன்தாரா மோதல் என்பது இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்ப்பது போன்று ஆர்வமாக இருந்ததாகவும், சினிமா துறையில் விவாகரத்து அதிக அளவில் பெருகி வருவதற்கு விவாக வருடம் என்பதை விவாகரத்து வருடமாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்த பார்த்திபன், ஏ. ஆர். ரஹ்மான் உலகில் மிகச் சிறந்த மனிதர் அவருடைய குடும்ப விவகாரத்தை யாரும் பெரிதுபடுத்தி இருக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து, அது வருத்தமும் அளிக்கிறது என்றார்.

மேலும், நடிகர் விஜய் குறித்த அந்த கேள்விக்கு, விஜய் அரசியல் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல் மாநாடு பிரமாதமாக இருந்தது. விஜய் அரசியலுக்கு வந்திருப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்று எனக் குறிப்பிட்ட பார்த்திபன், திமுகவை விஜய் எதிர்ப்பதுதான் சரியான விஷயம். ஏனென்றால், எம். ஜி. ஆர். போன்றவர்கள் ஆளுங்கட்சியை எதிர்த்துதான் அரசியல் செய்திருக்கிறார்கள். ஆளுங்கட்சியை எதிர்த்தால்தான் கதாநாயகனாக வர முடியும் என்றார்.

சினிமா உலகில் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளது. எப்போதும் ஆண்கள்தான் பலவீனமானவர்கள், பெண்கள் எப்போதும் வலிமையானவர்கள்தான். பெண்களுக்குப் பாதுகாப்பு தேவையில்லை, அவர்களே அவர்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.