ஏ.ஆர். ரஹ்மான் எனக்கு தந்தை போன்றவர்! மோகினி டே

ரஹ்மான் குறித்த விமர்சனங்களுக்கு மோகினி டே விளக்கம்..
ஏ.ஆர். ரஹ்மான், மோகினி டே
ஏ.ஆர். ரஹ்மான், மோகினி டே
Updated on
1 min read

ஏ.ஆர். ரஹ்மான் தனக்கு போன்றவர் என்று அவரது இசைக்குழு உறுப்பினர் மோகினி டே விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிந்து வாழவிருப்பதாக கடந்த வாரம் அறிவித்த நிலையில், சில மணிநேரங்களிலேயே அவரது இசைக் குழுவின் கிதார் கலைஞர் மோஹினி டேவும், தனது கணவரை விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்தார்.

இதனை பலரும் தவறாக விமர்சித்ததை தொடர்ந்து, ரஹ்மானின் மனைவி சாய்ரா விவகாரத்துக்கான காரணம் தான் உடல்நலம் சரியில்லாமல் மும்பையில் இருப்பதுதான் என்றும், ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள், அவர் உலகின் சிறந்த ஆண் என்றும் தெரிவித்திருந்தார்.

ரஹ்மானும், தன் விவாகரத்து குறித்து பரப்பப்பட்டுள்ள அவதூறு செய்திகளை 24 மணிநேரத்துக்குள் யூடியூப் மற்றும் செய்தி நிறுவனங்கள் நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நோட்டீஸ் வெளியிட்டார்.

இந்த நிலையில், ரஹ்மான் குறித்து விடியோ ஒன்றை மோகினி டே வெளியிட்டுள்ளார்.

அதில், “என் வாழ்க்கையில் தந்தை போன்றவர்கள் மற்றும் முன்மாதிரியான நபர்கள் சிலர் உள்ளனர். அவர்களின் ரஹ்மானும் ஒருத்தர். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். என் தந்தை போன்றவர் அவர்.

எனது தந்தையைவிட சில வயது மட்டுமே குறைவானவர் ரஹ்மான். அவரின் மகளுக்கு சரியாக என் வயதுதான் இருக்கும். அவரது இசைக்குழுவில் 8 ஆண்டுகளாக கிதார் கலைஞராக உள்ளேன். 5 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில்தான் அவரை சந்தித்தேன்.

தயவு செய்து எங்களின் தனியுரிமையை மதிக்கவும். மிகவும் கடுமையான சூழலை வலிகளுடன் கடந்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், “என் மீதும் ரஹ்மான் மீதும் பரப்பப்பட்டுள்ள தகவல்கள் ஆதரமற்றவை. இதுபோன்ற உணர்ச்சிகரமான விஷயங்களில் மரியாதையும் அனுதாபமும் இன்றி செயல்படுவது வருத்தமாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com