பிக் பாஸ் வர்ஷினி வெளியிட்ட முதல் விடியோ!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலிருந்து வெளியேளிய நடிகை வைஷ்ணவி வெங்கட் முதல்முறையாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வர்ஷினி வெங்கட்
வர்ஷினி வெங்கட்இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
2 min read

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை வர்ஷினி வெங்கட் முதல்முறையாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோவில் பிக் பாஸ் மேடையில் தான் பேசத் தவறியவற்றை குறித்துப் பேசியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 8வது வாரத்தில், குறைந்த வாக்குகளைப் பெற்றதால் நடிகை வர்ஷினி வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய போட்டியாளர்களில் மிகவும் நேர்மறையாக வெளியேறியவர் என ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார் வர்ஷினி.

இதற்கு முன்பு வெளியேறியவர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் குறித்து அவதூறாகவே பேசிவிட்டுச் சென்றனர்.

ஆனால், வர்ஷினி தன்னுடைய சக போட்டியாளர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பேசி, வாழ்த்துகளைக் கூறிவிட்டு வெளியேறினார்.

கனவு போன்றது பிக் பாஸ்

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு முதல்முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை வர்ஷினி வெளியிட்டுள்ளார்.

அதில் வர்ஷினி பேசியுள்ளதாவது,

''பிக் பாஸ் பயணம் மிகுந்த சுவாரசியமாக இருந்தது. பிக் பாஸ் மேடையில் பேச நேரமில்லாததால், இப்போது விடியோ மூலம் பேசுகிறேன்.

எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு மிக்க நன்றி. உங்களால் பிக் பாஸ் வீட்டில் ஒரு வாரம் தப்பித்தேன். என்னுடைய பயணம் குறுகியதாக இருந்தாலும், மிகவும் உண்மையாக இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. ஓவ்வொருவரும் குடும்பமாக நினைக்க வைத்தனர்.

பிக் பாஸ் வீட்டில் மறுமுறை வாய்ப்பு கிடைக்காதா? என்ற ஏக்கம் உள்ளது. திரும்ப பிக் பாஸ் வீட்டிற்குச் சென்று வாழ்ந்துவிட மாட்டோமா? என நினைக்கிறேன்.

பிக் பாஸ் வீட்டில் இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. இருந்தாலும் பரவாயில்லை. பிக் பாஸ் நல்ல அனுபவம். ஒரு நல்ல கனவிலிருந்து எழுந்து வந்ததைப்போல உள்ளது.

நான் நல்ல ஆன்மாவாக பலருக்குத் தெரிந்துள்ளேன். அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த அனைவருக்கு மிக்க நன்றி. நிறைய ரசிகர்கள் எனக்கு ஆதரவு அளித்துள்ளீர்கள். இதனைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது அனைவருக்கும் நன்றி'' என வர்ஷினி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடியோவில் பலர் வர்ஷினியின் எதிர்காலத் திட்டங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: நட்புக்கும், போட்டிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com