பிக் பாஸ் 8: நட்புக்கும், போட்டிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் சில போட்டியாளர்களிடையேயான நட்பு பெரிதாகப் பேசப்படுவது வழக்கம்.
பிக் பாஸ் 8-ல் செளந்தர்யா, ஜாக்குலின்
பிக் பாஸ் 8-ல் செளந்தர்யா, ஜாக்குலின்படம் | எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் சில போட்டியாளர்களிடையேயான நட்பு பெரிதாகப் பேசப்படுவது வழக்கம்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மாயா - பூர்ணிமா இடையிலான நட்பு மிகவும் வலுவாக இருந்தது. அதுவரை பழக்கமில்லாத இருவர், பிக் பாஸ் வீட்டில் உள்ள சில நாள்களில் சந்தித்து நட்பாகுவது பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அந்தவகையில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், ஜாக்குலின் - செளந்தர்யா இடையிலான நட்பு வலுவாக உள்ளது. பிக் பாஸ் 8 தொடங்கியது முதலே பல்வேறு சூழல்களில் செளந்தர்யாவுக்கு ஆதரவாக ஜாக்குலின் இருந்துள்ளார்.

ஜாக்குலின் - செளந்தர்யா நட்பு

பெண்கள் அணியில் உள்ள போட்டியாளர்களிடையே பல்வேறு டாஸ்க்குகளின்போது மோதல் போக்கே நீடித்து வருகிறது. எனினும், இதையெல்லாம் தாண்டி ஜாக்குலின் - செளந்தர்யா நட்பு நிலைத்து வருகிறது.

இதேபோன்று வைல்டுகார்டு மூலம் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த மஞ்சரி, ஜாக்குலினுடன் மிகுந்த நட்பு வட்டத்தில் உள்ளார். ஆனால், செளந்தர்யாவும் மஞ்சரியும் இரு துருவங்களாக போட்டிபோட்டுக்கொண்டு உள்ளனர். சொல்லப்போனால், மஞ்சரிக்கு எதிராகவும் சில நேரங்களில் செளந்தர்யா செயல்படுகிறார்.

எனினும் மஞ்சரியுடன் அதே நட்பை ஜாக்குலின் தொடர்ந்து வருகிறார். இருந்தபோதும் ஜாக்குலினுக்கு செளந்தர்யா ஆதரவு தெரிவிக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 வது வாரத்தில் இந்த முக்கோண நட்பு ரசிகர்களுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது. நட்புக்கும் போட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

நட்பு வேறு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டி வேறு என்பதை இந்த மூவருக்கு இடையே உள்ள உறவின் மூலம் அறியலாம் என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | மீண்டும் பிக் பாஸ் தொகுப்பாளராகிறார் கமல் ஹாசன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.