அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள படம் சொர்க்கவாசல். இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் கதைக்களம் 1999 ஆம் ஆண்டு சென்னை மத்தியச் சிறைச்சாலையில் நடந்த சிறைக் கலவரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
சில நாள்களுக்கு முன் வெளியான படத்தின் டிரைலரும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சிறைக் கலவரக் காட்சிகள், சிறையில் நடக்கும் அதிகார சண்டைகள் என புதுப்பேட்டை, வடசென்னை பாணியில் எதார்த்தமான படமாக இருக்குமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிக வன்முறைக் காட்சிகள் இருப்பதால் தணிக்கைத்துறை படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் அனிருத் தி என்ட் என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
கிளிண்ட் லெவிஸ், அருண் ஸ்ரீநிவாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளார்கள். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார்.