

காந்தாரா இரண்டாம் பாகத்தில் மோகன்லால் இணையவுள்ளதாகத் தகவல்.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.
கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
காந்தாரா படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட காலத்துக்கு முன் நடக்கும் கதையாக உருவாகும் காந்தாரா - 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமாக இப்படத்தைக் கொண்டு வர ரிஷப் ஷெட்டி திட்டமிட்டுள்ளதால் பான் இந்திய வெளியீடாக திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் ரிஷப் ஷெட்டிக்கு தந்தையாக நடிகர் மோகன்லால் நடிக்கவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தன் மனைவியுடன் சென்று மோகன்லாலை ரிஷப் ஷெட்டி சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.