காதல் என்ற பெயரில் ஏமாற்றம்... ஜானி மாஸ்டரின் ஜாமீன் ஒத்திவைப்பு!

நடன இயக்குநரான ஜானி மாஸ்டரின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 நடன இயக்குநர் ஜானி
நடன இயக்குநர் ஜானி கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் கடந்த 4 வருடங்களாக பெண் உதவி நடன இயக்குநரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் (21) அளித்த புகாரில் கடந்த செப்.17ஆம் தேதி ஹைதாராபாத் ராய்துர்கம் பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் பின்னர் தலைமறைவான ஜானி மாஸ்டரை காவல்துறையினர் கோவாவில் வைத்து கைது செய்தனர். ஐபிசி (இந்திய குற்றவியல் சட்டம்) 376, 506 மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு சாரளப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் அந்தப் பெண் மைனராக இருக்கும்போதிருந்தே அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியிடுந்தது.

இந்நிலையில், அதெல்லாம் பொய்யென்றும் இது திட்டமிட்ட சதி என ஜானி மாஸ்டர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பாதிக்கப்பட்ட பெண் மன உளைச்சலை தந்ததாகவும் சினிமாவில் அவப்பெயர் உண்டாக்குவேன் என மிரட்டியதாகவும் ஜானி மாஸ்டர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், ஜானி மாஸ்டர் இது குறித்து புஷ்பா பட இயக்குநர் சுகுமார் இடம் கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜானி மாஸ்டரின் மனைவி ஆயிஷா, “காதல் என்ற பெயரில் பணக்காரர்களை மிரட்டி பணம் சம்பாதிக்கும் முயற்சி இது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜாமீன் கேட்டு விண்ணப்பிருந்த ஜானி மாஸ்டரின் விண்ணப்பம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை அக்.7ஆம் தேதிக்கு நடைபெறுமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.