கோட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் செப்.5ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.
கோட் படத்தில் விஜய்யுடன் சிநேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், யோகிபாபு உள்பட சிவகார்த்திகேயனும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிகபட்சமாக இப்படம் ரூ. 430 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது.
திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.