
நடிகர் விஜய்யுடன் நடிக்க முடியாமல் போய்விடுமென நடிகை மமிதா பைஜூ பயந்ததாக பேசிய விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஹெச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் முதல் நடிகராக பாபி தியோல் இணைந்ததாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து, பூஜா ஹெக்டேவும் படத்தில் இருப்பதை அறிவித்தனர்.
’மினி மகாராணி’ எனக் குறிப்பிட்டு நடிகை மமிதா பைஜூ இப்படத்தில் இணைந்ததை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் நடிகை மமிதா பைஜூ கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசிய விடியோ வைரலாகியுள்ளது. நேர்காணல் ஒன்றில் மமிதா பைஜூ பேசியதாவது:
நடிகர் விஜய்யுடன் நடிக்க முடியாமல் போய்விடுமென நடிகை மமிதா பைஜூ பேசியுள்ள விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நான் விஜய் சாருடன் ஒரு படமாவது நடிக்க வேண்டுமென நினைத்தேன். தமிழில் மற்றுமொரு நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது விஜய்யுடனும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்குமென நினைத்திருக்கிறேன். விஜய் சாரின் படங்களுக்கென்று திரையரங்கில் கொண்டாட்டம் இருக்கிறது. இனிமேல் அவர் நடிக்கவில்லையெனில் அதையெல்லாம் மிகவும் மிஸ் செய்வேன்.
நான் வளர்ந்ததே விஜய் சாரின் படங்களைப் பார்த்துதான். கில்லி படத்துக்கு நான் தீவிர ரசிகை என்றார்.
இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது. மமிதா பைஜூவின் ஆசை நிறைவேறிவிட்டதென விஜய், மமிதா பைஜூ ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சூப்பர் சரண்யாவில் அசத்திய மமிதா பைஜூ பிரேமலுவில் அட்டகாசம் செய்துள்ளார். இதனால், தென்னிந்திய சினிமாவில் கவனிக்கும் நடிகையாக உருவாகியுள்ளார் மமிதா.
வணங்கான் படத்தில் இயக்குநர் பாலா தன்னை அடித்ததாகக் கூறிய செய்தியை மறுத்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானதும் குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் கடைசி படம் என்பதால் அவரது ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.