2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பிளடி பெக்கர் டீசர்!

நடிகர் கவினின் பிளடி பெக்கர் டீசர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :7 அக்டோபர் 2024, 12:54 pm

DIN

நடிகர் கவினின் பிளடி பெக்கர் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.

சமீபத்தில் நெல்சன் ‘ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்’ (filament pictures) என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கியுள்ளதாக அறிவித்தார்.

இவரின் முதல் படத்தில் நாயகனாக நடிகர் கவின் நடித்துள்ளார். இப்படத்திற்கு, ‘பிளடி பெக்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் எழுதி இயக்கும் இப்படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பிரதான வேடத்தில் நடிக்கிறார்.

Story image

இப்படம் தீபாவளி வெளியீடாக அக். 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிச்சைக்காரராக நடித்துள்ள கவின் கவனம் ஈர்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.