முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் அடுத்த அப்டேட்!

நடிகர் தனுஷுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்.

Updated On :

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இதில், தனுஷ் சகோதரியின் மகன் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான, ‘கோல்டன் ஸ்பாரோ’ பாடல் வெளியானது. இப்பாடலுக்கு நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் அறிவு வரிகளில் தனுஷ், ஜி.வி. பிரகாஷ், அறிவு மற்றும் சுப்லாஷ்லினி உள்ளிட்டோர் பாடிய இப்பாடல், ரசிகர்களிடம் கவனம் ஈர்த்ததுடன் யூடியூபில் 3.2 கோடி (32 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பலரும் மடிசார் புடவையில் இப்பாடலுக்கு ரீல்ஸ் செய்து வைரலாக்கினர்.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த பாடல் இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்றும் இதனை தனுஷ் பாடியுள்ளதாகவும் தகவல் அளித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.