சாதனை படைத்த சிங்கம் பட டிரைலர்!
அஜய் தேவ்கன் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான சிங்கம் ரிட்டர்ன் வெளியாகி 9 வருடங்கள் ஆகின்றன.
தற்போது இந்த காவலர்கள் யுனிவர்ஸில் ரன்வீர் சிங் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக இயக்குநர் தெரிவித்திருந்தார்.
அஜய் தேவ்கன் நடிப்பில் இயக்குநர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் 2011இல் சிங்கம் படம் வெளியானது. இது தமிழில் ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் ரீமெக். மீண்டும் 2014இல் அஜய் தேவ்கனுடன் ரோஹித் ஷெட்டி இயக்கிய படம்தான் சிங்கம் ரிட்டர்ன்ஸ்.
2018இல் ரன் வீர் சிங்குடன் ரோஹித் ஷெட்டி மீண்டும் காவல்துறை அதிகாரியாக சிம்ஹா எனும் பெயரில் எடுத்தார். இந்தப்படம் டெம்பர் என்னும் 2005இல் வெளியான் தெலுங்கு படத்தின் ரீமெக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிங்கம் யுனிவர்ஸில் 4 கதாநாயகர்கள் இணைந்துள்ளார்கள். அஜய் தேவ்கனுடன் அக்ஷய் குமார், ரன்வீர் சிங் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் நடிகருமான ஸ்ரீசாந்த் ஆகியோர்கள் இணைந்துள்ளார்கள்.
இதையும் படிக்க: 4ஆவது தேசிய விருது வென்ற மனோஜ் பாஜ்பாயி பேசியதாவது?
’சிங்கம் அகெய்ன்’ எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தின் டிரைலர் நேற்று (அக்.7) வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது.
இதில் தீபிகா படுகோன், கரீனா கபூரும் நடித்துள்ளார்கள். 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஹிந்தி பட டிரைலராக சாதனை படைத்துள்ளது.
24 மணி நேரத்தில் அனைத்து சமூக ஊடகங்களிலும் சேர்த்து 138 மில்லியன் (13 கோடியே 80 லட்சம்) பார்வைகளைப் பெற்றுள்ளது என தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டூடியோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப்படம் நவ.1ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.