
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் டிக்கெட் முன்பதிவு மந்தமாக உள்ளது.
ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் என்கவுன்டரை மையப்படுத்தி உருவாகியுள்ளது. படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.
இப்படம் நாளை (அக்டோபர் 10) திரையரங்குகளில் வெளியாவதால் ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இதையும் படிக்க: கமல் - 237 படப்பிடிப்பு அப்டேட்!
ஆனால், இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் இரண்டு நாள்களுக்கு முன்பே துவங்கினாலும் விற்பனையில் மந்தமாகவே இருக்கிறது. சென்னையில் பெருவாரியான திரையரங்குகளில் இப்போதும் டிக்கெட்கள் கிடைக்கின்றன.
டிரைலரில் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்றே கூறப்பட்டது. ஆனால், ரசிகர்கள் கொண்டாடக்கூடிய வகையிலான கமர்சியல் படமாக இருக்குமா என கேள்வி எழுந்துள்ளதால் முன்பதிவில் ஆர்வம் எழவில்லையோ எனத் தெரிகிறது. ஜெயிலர் படத்திற்குக் கிடைத்த முன்பதிவு வேகம் இப்படத்திற்குக் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.