காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கமல் - 237 படப்பிடிப்பு அப்டேட்!

கமல் - 237 திரைப்படம் குறித்து...

கமல்ஹாசனுடன் அன்பறிவ் சகோதரர்கள்.

Published On :

நடிகர் கமல்ஹாசனின் 237-வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) சகோதரர்கள் மெட்ராஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்கள்.

பின்னர் லோகேஷ் கனகராஜ் படங்களான மாநகரம், கைதி. மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் மூலம் மிகவும் புகழ்பெற்றுள்ளார்கள். தற்போது, அன்பறிவ் சகோதரர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்திப்  படங்களிலும் பணியாற்றி வருகிறார்கள்.

கேஜிஎஃப் படத்துக்காக தேசிய விருது பெற்றதுடன் கேஜிஎஃப் - 2 படத்திற்கும் தேசிய விருதை நேற்று (அக். 8) பெற்றனர்.

இதற்கிடையே, கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பாக கமல்ஹாசனின் 237வது படத்தினை அன்பறிவ் சகோதர்கள் இயக்குகிறார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

இப்படம் எப்போது துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் கமல் - மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் துவங்கியது. தற்போது, கமல் - 237 படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரி மாதம் துவங்கவுள்ளதாகவும் இப்படம் அனைத்து சினிமா ரசிகர்களையும் கவரும் ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என அன்பறிவ் சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.