
இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் நேற்று (அக்.10) வெளியானது.
ஜெயிலர் படத்திற்குப் பின் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கவுள்ள படமென்பதால் ஆரம்பம் முதலே வேட்டையன் மேல் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், படத்தின் டீசர் மற்றும் டிரைலர் நினைத்த வரவேற்பைப் பெறாததால், வேட்டையனுக்கான டிக்கெட் முன்பதிவுகள் சுமாராகவே இருந்தன.
இந்நிலையில், முதல்நாளில் வேட்டையன் ரூ. 30 கோடி வசூலித்துள்ளதாக தகவல். ஹிந்தியில் வெறும் ரூ. 6 லட்சம் மட்டுமே வசூலாகியுள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம்..!
கோட் திரைப்படம் முதல்நாளில் ரூ.44 கோடியும் ஜெயிலர் திரைப்படம் முதல்நாளில் ரூ. 48.35 கோடியும் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழில் ரூ.26.15 கோடி, தெலுங்கில் ரூ.3.2 கோடியும் வசூலித்துள்ளது வேட்டையன் திரைப்படம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.